Wednesday 5 October 2011

தேசியக் கொடி பர்பி



மைதா 1 கப்
நெய் 3/4 கப்
சர்க்கரை 1 1/2 கப்
தண்ணீர் 1/2 கப்
ஏலக்காய் பொடித்தது 1 டீஸ்பூன்
ஃபுட் கலர் பச்சை, ஆரஞ்சு


மைதாவை நன்கு சலித்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடு செய்து அதனுடன் சிறிது சிறிதாக மைதாவை சேர்க்கவும்.கட்டி தட்டாமல் தயிர் போன்ற பதம் வரும் வரை கிளறவும். இதனை மூன்று பங்காகப் பிரித்து ஒரு பகுதியுடன் பச்சை நிறத்தையும், மற்றொரு பகுதியுடன் ஆரஞ்சு நிறத்தையும் சேர்க்கவும்.மீதமுள்ள ஒரு பகுதியை அப்படியே வைக்கவும். சர்க்கரையுடன் தண்ணீரைச் சேர்த்து கம்பிப் பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.( கம்பிப்பாகு:ச்ர்க்கரைக் கரைசலை விரலால் எடுத்து விரலைப் பிரிக்கும் போது கம்பி போன்ற இணைப்பு விரலுக்கிடையேத் தோன்றும்.) பாகினை மூன்று பாகங்களாகப் பிரித்து பச்சை,ஆரஞ்சு மற்றும் நிறமற்ற மைதாக் கரைசலை தனித்தனியாக சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் பச்சை,வெண்மை மற்றும் ஆரஞ்சு நிறக் கலவைகளை ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி, சிறிது ஆறியதும்,மெல்லிய துண்டுகள் போடவும். ஒவ்வொரு துண்டிலும் டூத் பிக் கை பச்சை நிறத்தின் பக்கம் குத்தி வைத்து பரிமாறினால் தேசியக் கொடி போன்ற தோற்றத்தைத் தரும்.வித்தியாசமானதாகவும் இருக்கும்.

Tuesday 4 October 2011

கலர்புல் கிச்சடி

தேவையானவை
துருவிய பீட்ரூட்+துருவிய கேரட்+வேகவைத்த பீன்ஸ்‍ 1 கப்
வெள்ளை ரவை ‍ 1 கப்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 4
நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
இஞ்சி சிறிதளவு
கருவேப்பிலை,கொத்தமல்லி தழை  ‍சிறிது







செய்முறை
வாயகன்ற வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்  விட்டு,அதனுடன்  சூடானதும்,கடுகு,கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கவும்.காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதனுடன் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்தவுடன் ரவையை சிறிது சிறிதாக கொட்டி  நன்கு வேகும் வரை,பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை (ஏறத்தாழ 5 நிமிடங்கள்)கிளறவும். கிளறும் போது சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்தபின் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

.

ச்சும்மா ஒரு சின்ன விளக்கம்:-)

பாட்டி சமையல்,அம்மா சமையல், அத்தை சமையல் என‌ எல்லார் வீட்டுச் சமையலறையிலும் வித்தியாசங்களும்,பக்குவங்களும் நிறைந்தே இருக்கின்றன.என்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து நான் கற்ற சமையலைப் பாதுகாத்து வைக்கும்  சின்ன முயற்சி